உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

வளைகுடாப் பகுதியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100  டொலர்களை விஞ்சியுள்ளது.

இதனால், உலக சந்தைகள் ஆட்டம் கண்டதுடன், புதிய பணவீக்க அதிர்ச்சி குறித்த அச்சங்கள் மீண்டும் எழுந்தன.

இதன் விளைவாக, வெள்ளிக்கிழமையன்று (24) ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன.

ஈரானுடன் தொடர்புடைய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சவுதி எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்திய தாக்குதல்கள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான மத்திய கிழக்கின் இரண்டாவது முக்கியப் பாதையை முடக்கியதாலும் (ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையை ஈரான் கிட்டத்தட்ட மூடியிருந்த நிலையில்), பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரே இரவில் 7% உயர்ந்து இரண்டு மாதங்களில் இல்லாத அளவாக பீப்பாய் ஒன்றுக்கு 102 டொரை எட்டியது.

பின்னர் அது 100.85 டொலர் என்ற நிலையில் நீடித்தது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர்நிறுத்தம் நடைமுறையில் முறிவடைந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், வெள்ளிக்கிழமை காலை வரை ஈரான் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

அதேவேளையில், அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள அண்டை அரபு நாடுகள் மீது ஈரானும் தாக்குதல்களை நடத்தியது.

மோதல் தணிவதற்கான அறிகுறிகள் ஏதுமின்றி நீடிப்பதால், இந்த மாதத்தில் மட்டும் ‘ப்ரெண்ட்’ Brent) மசகு எண்ணெய் விலை கிட்டத்தட்ட 40% உயர்ந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள்…

12 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

42 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

49 0 0
உலக செய்திகள்

இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை

இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக…

22 0 0