உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

வங்காள விரிகுடாவில் 36 நாட்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் உயிருடன் மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
56 பார்வைகள்

வங்காள விரிகுடா கடலில் 36 நாட்களுக்கும் மேலாகத் தத்தளித்த நிலையில் இருந்த இலங்கை மீனவர்கள் இருவர், பங்களாதேஷின் கொக்ஸ் பாசார் மாவட்டம் மஹேஷ்காலி பகுதியைச் சேர்ந்த மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதிக்கு அருகில் படகு ஒன்றில் தத்தளித்த மேற்படி இருவரையும் பங்களாதேஷ் மீனவர்கள் கண்டுபிடித்து, தமது படகில் ஏற்றி மஹேஷ்காலி கடற்கரைக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உணவு மற்றும் குடிதண்ணீர் இன்றி 36 நாட்களுக்கும் மேலாக கடலில் தத்தளித்த அவர்கள், பச்சையாக மீன்களை உணவாக உட்கொண்டு உயிர் தப்பினர் என்று விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் எவ்வாறு கடலில் தத்தளித்தனர் மற்றும் உண்மையில் 36 நாட்கள் வங்காள விரிகுடாவில் கழித்தார்களா என்பது குறித்துப் பங்களாதேஷ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் பேரவை கூட்டணியின் பிரதிநிதியாக இராதாகிருஷ்ணன் பெயரீடு.!

தமிழ் – முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

25 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய…

22 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!

பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; அப்பகுதியில் பரபரப்பு.!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF)…

48 0 0