உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்துள்ள 6 தமிழ் பேசும் கட்சிகளும் ஜனாதிபதியை சந்திக்க திட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
52 பார்வைகள்

இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாட இந்தக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதியிடம் நேர ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவும் அந்தக் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

இதன் மூலம் இந்த விடயங்கள் தொடர்பாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அந்தக் கட்சிகள், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டு நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0