உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பிரதேச சபை வாகனம் பறிமுதல்: சாரதி மதுபோதையில் கைது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
129 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் வாகனத்தில், தே.ம.ச. உறுப்பினர் வசந்தன் மற்றும் சுயாதீன உறுப்பினர் ஜனாஷ்டன் ஆகியோர் நேற்று (24) மாலை பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியில் பிரதேச சபை வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொகவந்தலாவ பொலிஸாரால் வாகனம் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இரண்டு உறுப்பினர்களுடன் வாகன சாரதியும் மதுபோதையில் இருந்தமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சாரதி கைது செய்யப்பட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0