கறுப்பு ஜூலை, செம்மணி படுகொ*லைக்கு சர்வதேச நீதி கோரி இங்கிலாந்தில் போராட்டம்.!
கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையிலும், செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.