உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் இதுவரை 471 அடையாளம்!

குற்றம் 2 நாட்கள் முன்
85 பார்வைகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக நான்கு என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் பதினொன்று என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் தொண்ணூற்றுநான்கு நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை நானூற்றுஎழுபத்தொன்று என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் நானூற்று ஐம்பத்தைந்து என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் நேற்று செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதிக்குச் சென்று, அகழ்வுப் பணியினை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிபுணர் குழுவினருடன் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

புதுக்குடியிருப்பில் வீதியை ஆக்கிரமித்துச் சட்டவிரோத கட்டிடம்:அதிகாரிகள் மௌனம் காப்பதாக மக்கள் கொந்தளிப்பு!

புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கா வீதியும் பாண்டியன் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியான மாம்பழம் சந்தி என்று பலராலும் கூறப்படும் சந்தியில் புதுக்குடியிருப்பு முன்னாள் தவிசாளர்ஆ. தவக்குமார் அவர்களின் மச்சானான…

329 0 0
குற்றம்

PickMe, Uber சாரதிகள் மீது தொடரும் கொடூர தாக்குதல்கள்!

கடந்த சில நாட்களாக PickMe மற்றும் Uber செயலிகள் மூலம் சேவையாற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் மீது முச்சக்கரவண்டி சங்க சாரதிகள் தாக்குதல் நடத்துவதும், பொது வெளியில் தகாத…

86 0 0
குற்றம்

மீற்றர் வட்டிக் கொடூரம்; அடாவடித்தனமாக பெருமளவு சொத்துக்கள் பறிப்பதாக முறைப்பாடு.!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு, கருமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த ரகுவரன் என்பவர் மீது மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குதல், பணத்தை மீள வழங்காதவர்களை அச்சுறுத்தல், சொத்து அபகரிப்பு…

523 0 0
குற்றம்

கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு.!

கிளிநொச்சி மாவட்ட பளை வண்ணாங்கேணி வடக்கு பகுதி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான ஜெனீவன் மீது விவசாயிகளால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கமநல அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக…

90 0 0