உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

வத்தளை துப்பாக்கிச் சூடு – இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
62 பார்வைகள்

வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களைக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவளவில் வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள வரவேற்பு மண்டபமொன்றில் நடைபெற்ற விருந்தொன்றிற்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த ‘குடு ரொஷான்’ என்பவரைக் இலக்கு வைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இலக்குத் தவறியதால் அவருக்கு அருகில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பிள்ளையானிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

19 0 0
இலங்கை செய்திகள்

கடந்த 7 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று…

53 0 0
இலங்கை செய்திகள்

சிறை நெரிசலைக் குறைக்க வீட்டுக்காவலை அறிமுகப்படுத்தவும் யோசனை!

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பூகொடை புதிய…

18 0 0
இலங்கை செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்!

2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி…

33 0 0