உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

சிறை நெரிசலைக் குறைக்க வீட்டுக்காவலை அறிமுகப்படுத்தவும் யோசனை!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
70 பார்வைகள்

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதான விருந்தினராக இன்று (24) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, தற்போது 10,375 பேரையே தங்கவைக்கக்கூடிய சிறைச்சாலைகளில் அதைப்போல் நான்கு மடங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இக்காரணங்களினால் சில குழுக்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமே இதற்குச் சிறந்த உதாரணம் என்றும் ஹர்ஷண நாணயக்கார வலியுறுத்தினார்.

இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வதற்காகத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம் சிறைச்சாலை நெரிசலுக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், திணைக்களத்தின் திறனை அதிகரிப்பதற்குத் தேவையான மனிதவளம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி அந்த நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தற்போது தலையிட்டு வருகிறது.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் வீட்டுக்காவல் (House Arrest) போன்ற தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

82 0 0
இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

80 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

82 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

56 0 0