உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

சங்கானை பிரதேச செயலகம் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த வலி மேற்கு பிரதேச சபை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
136 பார்வைகள்

சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன தரிப்பிடம் மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம் முன்வைத்த கோரிக்கையை வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிராகரித்துள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் நேற்றைய மாதாந்த அமர்வில் குறித்த விடயம் தொடர்பான கோரிக்கை ஒன்றை பிரதேச செயலகம் விடுத்துள்ளதாக தவிசாளர் ஜயந்தனால் பிரஸ்தாபிக்கப்பட்டு அது தொடர்பாக சபை உறுப்பினர்கள் கருத்தை கோரியிருந்தார்.

இதன்போது குறித்த பேருந்து நிலைய வளாகம் வலி மேற்கு பிரதேச சபையின் ஆதனமாக இருப்பதனால் அவ்வளாகத்தினுள் பேருந்து நிலையத்துடன் அம்மாச்சி உணவகமும் இயங்கி வருகின்றன.

இதே நேரம் ஆலயம் ஒன்றும் இவ்வளாகத்துக்குள் இருக்கும் நிலையில் பிரதேச செயலகத்திற்குச் செல்வதற்கான ஒரு வாயிலும் இருக்கின்றது.

மறுபுறம் முச்சக்கர வண்டி தரிப்பிடமும் இருக்கும் நிலையில் பிரதேச செயலகம் தமது சேவை பெறுநர் வருகைக்கான ஒரு வீதி அமைக்கவும் வரும் சிறு வாகனங்களை தரித்து நிறுத்துவதற்குமான கொட்டகை ஒன்றும் அமைப்பதற்கான அனுமதியை பிரதேச சபையிடம் கோரியுள்ளது.

ஆனால் குறித்த நிலப்பரப்பில் பிரதேச சபை, தூர நோக்குள்ள மக்கள் நலன்சார் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை ஒருபுறமிருக்க ஆலயத்தின் முன் பகுதியாகவும் குறித்த இடம் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சபையின் ஆளுகை இந்த கையளிப்பூடாக எதிர்காலத்தில் இல்லாது போகும் நிலை வருவதற்கான ஏது நிலை இருக்கின்றது என பல விடயங்களை சுட்டிக்காட்டிய உறுப்பினர் செல்வக்குமார் சபைக்குரிய ஆதனமாக இருக்கும் ஒன்றை இன்னொரு அரச நிறுவனத்தின் வாகன தரிப்பிடத்திற்காக வழங்குவதையோ அவ் நிறுவனத்துக்குச் செல்வதற்கான வீதியை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.

மறுபுறம் குறித்த சபையின் முன்னாள் தவிசாளரும் இந்நாள் உறுப்பினருமான திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், இரு நிறுவனங்களும் மக்களுக்கான சேவை வழங்கும் ஒன்றாக இருக்கும் நிலையில் போக்குவரத்தை முன்னெடுக்கும் வீதியை அமைக்க இணக்கப்பாடு செய்ய முடியும் என்றும் அதுவும் எழுத்து மூலமாக அல்லாமல் ஒரு சமரச இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் மேலும் பல சபையின் உறுப்பினர்கள் குறித்த நிலப்பரப்பை பிரதேச செயலகத்துக்கு வழங்க முடியாது என்றும் தற்போது நடைமுறையில் எவ்வாறு இருக்கின்றதோ அதன்பிரகாரம் தொடர்ந்தும் செயற்படுவதே சிறந்தது என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் சபையின் உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு அனுமதியளிக்க விரும்பாமையால் தொடர்ந்தும் தற்போதுள்ள நடைமுறையின் அடிப்படையில் குறித்த செயற்பாடுகள் தொடரும் என சபையில் தீர்மானிக்கப்பட்டதுடன் பிரதேச செயலகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சிறப்பு இறை பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு…

28 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி…

19 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு சவூதி பயணம்! – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய…

27 0 0
இலங்கை செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத்…

20 0 0