உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணியில் அமர்ந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் குறித்து விரிவான ஆய்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
161 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுகளின் போது, கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளை ஒப்பிட்டுத் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37 ஆவது நாளில், கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையிலான என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டது. இதன் தாடை பிளவடைந்த நிலையிலும் காணப்பட்டது.

இந்த என்புத் தொகுதி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வுகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அது அகழ்ந்து எடுக்கப்பட்டது.

இந்த என்புத் தொகுதியுடன் சான்றுப்பொருட்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனினும், இதன் பின்னால் மேலும் இரண்டு என்புத் தொகுதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமையால், அது தொடர்பான ஆய்வுகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வின்போது இதேபோன்று (கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில்) கண்டெடுக்கப்பட்ட என்புத் தொகுதியையும், தற்போதைய மூன்றாம் கட்டத் தொகுதியையும் ஒப்பிட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த ஆய்வுகளுக்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கைகள் பீடத்தின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி.!

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள்…

76 0 0
இலங்கை செய்திகள்

தேரருக்கு வெள்ளையாடை அணிவித்து வீதியில் அழைத்து வந்த செயல் அரசியல் நாடகம்.!

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவி ஆடையின்றி சாதாரண கைதிகளுக்கான ஆடையில் அழைத்து வரப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது…

45 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது.!

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். பத்தரமுல்ல…

44 0 0
இலங்கை செய்திகள்

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

43 0 0