உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேரருக்கு வெள்ளையாடை அணிவித்து வீதியில் அழைத்து வந்த செயல் அரசியல் நாடகம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
120 பார்வைகள்

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவி ஆடையின்றி சாதாரண கைதிகளுக்கான ஆடையில் அழைத்து வரப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சட்டத்தரணி தாரக நாநாயக்கார, ஞானசார தேரருக்கு தண்டனை வழங்கப்பட்டமை அல்லது அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தாம் வாதிட வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை விதிமுறைகளின்படி கைதிகள் உள்ளே எவ்வாறு வைத்திருக்கப்படுகிறார்கள் என்பது தமக்குச் சிக்கலில்லை எனக் குறிப்பிட்ட அவர், எனினும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது புத்த சாசனத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் பிக்குகள் ஆஜர்படுத்தப்படுவது அத்தியாவசியமானது என வலியுறுத்தினார்.

இன வேறுபாடின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பர்கர் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அரசியல் நாடகமாக தேரருக்கு வெள்ளையாடை அணிவித்து வீதியில் அழைத்து வந்த செயலானது நாட்டின் நியாயமான மக்களால் நிராகரிக்கப்பட்டு அருவருக்கத்தக்கதாகப் பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலை நிலையான உத்தரவுகளின் (Standing Orders) 500ஆவது விதியின் பிரகாரம், கைதி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது நாகரீகமான ஆடையிலேயே ஆஜர்படுத்த வேண்டுமே தவிர, சிறையில் அணியும் ஆடையில் அழைத்து வர முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதனடிப்படையில் உபசம்பதா பெற்ற வணக்கத்திற்குரிய பிக்கு ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவரது காவி ஆடையுடன் ஆஜர்படுத்துவதே அவ்விதியின் சாராம்சமாகும் என்றார்.

அரசாங்கம் வேண்டுமென்றே ஞானசார தேரரைப் பழிவாங்கும் நோக்கில் இதனைச் செய்ததா என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், எவ்வாறு இருப்பினும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பெரும்பான்மையான நியாயமான மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0