உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ் டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
49 பார்வைகள்

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் தீவிரவாதம் குறித்து முதன்முதலில் எச்சரித்தவர் ஞானசார தேரர் என்றும், அவரது கூற்றை அன்றே கவனத்தில் எடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறான ஒரு பௌத்த துறவியை அநியாயமாகக் கைது செய்து, அவரது சீவரத்தை அகற்றியிருப்பது மிகவும் ஆபத்தான மற்றும் கண்டிக்கத்தக்க செயலாகும். பௌத்த வினய விதிகளின்படியும் மகாநாயக்கர்களின் அனுமதியுடனும் மட்டுமே துறவி ஒருவரின் சீவரம் குறித்தான முடிவுகளை எடுக்க முடியுமே தவிர, அரச அதிகாரிகளோ அல்லது தனிநபர்களோ தன்னிச்சையாகச் செயற்பட முடியாது.

பௌத்த சாசனத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின்படி அரசின் கடமை என சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசின் செயற்பாடுகள் பௌத்த மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், போரை வெற்றி பெற்று நாட்டிற்குப் பெரும் பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் கைதுகளும் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகளாகும் என அவர் சாடினார்.

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, தமிழ் பிரிவினைவாதிகள் மற்றும் டயஸ்போராவிடமிருந்து பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவே இத்தகைய பௌத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

நாட்டில் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் சம்பவங்கள் குறித்து எச்சரித்த அவர், மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பைத் திசைதிருப்பவே இவ்வாறான கைது நாடகங்கள் நடத்தப்படுவதாகவும், இதற்கெதிராக விரைவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பு.!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலொன்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில்…

68 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை.!

அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ கடந்த கால மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது என்று…

55 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி.!

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள்…

80 0 0
இலங்கை செய்திகள்

தேரருக்கு வெள்ளையாடை அணிவித்து வீதியில் அழைத்து வந்த செயல் அரசியல் நாடகம்.!

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவி ஆடையின்றி சாதாரண கைதிகளுக்கான ஆடையில் அழைத்து வரப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது…

49 0 0