உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
64 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மறே வட்டாத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர் இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்து பேசினார்.

இன்று 16 ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் தலைமையில் மாதாந்த அமர்வு அச்சினிக்கா மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் காணி உரிமை அவசியம்.

குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் இன்று அனாதைகளாக நமது இலங்கை திருநாட்டில் உள்ளனர்.கடந்த 203 வருடமாக இலங்கையில் உள்ள காடுகளை அழித்து தேயிலை இறப்பர் தென்னை கோப்பி கொக்கோ போன்ற பயனுள்ள பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.

இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியை அன்று முதல் இன்றுவரை ஜந்து தலைமுறையாக ஈட்டி தந்த வன்னம் உள்ளனர்.

இவ்வாறு உழைத்து வரும் தோட்ட தொழிலாளர்களுக்கு அவ்வப்போது ஆண்டு வந்த அரசாங்கங்கள் லயின் தொடர் குடியிருப்புகளில் வாழ்வதை கண்டு கொள்ளாமல் இருந்தது.நாட்டில் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் நில உரிமை இவர்களுக்கு இல்லை.

ஆகவே குறைந்த பட்சம் 20 பேச் காணியை தோட்ட குடியிருப்புகளில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் அதனை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மற்றும் நாட்டின் தலைவரான அதி மேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முன் மொழிவை இன்றைய அமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஏற்றுகொணாடனர்.அத்துடன் ஆதரவு நல்கினர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சிறந்த அறிகுறி

தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான…

39 0 0
இலங்கை செய்திகள்

கடுவலை நவகமுவவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கடுவலை – நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு இன்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்…

54 0 0
இலங்கை செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதிய சிக்கல்களை விரைவில் தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வெளிநாட்டில் பணிப்புரியும் ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

61 0 0
இலங்கை செய்திகள்

புதிய உலகை வழிநடத்த இளைஞர்கள் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க வேண்டும்!

தங்கள் தலைமுறையினர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டதாகவும், தற்போதைய புதிய தலைமுறையினரின் (Gen Z) சிந்தனைகளையும் தேவைகளையும் அவர்களே நன்கு அறிவார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி…

57 0 0