கடுவலை நவகமுவவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!
கடுவலை – நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மற்றும் அது குறித்த பின்னணி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்