உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் மாயம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
203 பார்வைகள்

நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று 13 ம் திகதி மதியம் இடம் பெற்றுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல்  கல்வி கற்கும்   மாணவர்கள் 10 பேர் இன்றைய தினம்  மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் பாடசாலைகளில்  நடத்தப்பட்ட பரிட்சையை  எழுதிவிட்டு வோல்ட்ரீம்  தோட்டத்திற்கு அருகே உள்ள ஆக்ரா ஓயா ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர்.

நீராட சென்ற 10 மாணவர்களில் ஒன்பது மாணவர்கள் கரை திரும்பிய போதிலும் ஒரு மாணவர் மாத்திரம் கரை திருப்பவில்லை.

இவ்வாறு காணாமல் போன  மாணவர் மிளகுசேனை (பியபீல்ட் )  தோட்டத்தை சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது )  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரை தேடும் நடவடிக்கையில் லிந்துலை பொலிசார் மற்றும் பிரதேச வாசிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

7 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டம் : லிட்ரோ அறிவிப்பு!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்…

82 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் மின்சார வாகன மின்கலங்களை முகாமைத்துவம் செய்ய தேசிய திட்டம் இல்லை!

இலங்கையில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகன மின்கலங்களைச் சேகரித்தல், சேமித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல் ஆகியவற்றுக்கான முறையான தேசிய முகாமைத்துவக் கட்டமைப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை…

79 0 0
இலங்கை செய்திகள்

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் (BIA) இரு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம்…

73 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம் – வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற கஜேந்திரன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திருவுருவச் சிலை தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்ய இன்று காலை 10மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார்.…

11 0 0