இலங்கையில் மின்சார வாகன மின்கலங்களை முகாமைத்துவம் செய்ய தேசிய திட்டம் இல்லை!
இலங்கையில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகன மின்கலங்களைச் சேகரித்தல், சேமித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல் ஆகியவற்றுக்கான முறையான தேசிய முகாமைத்துவக் கட்டமைப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட சில மின்கலங்கள் திறந்தவெளிகளில் சேமிக்கப்படுவதால், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்துகள் ஏற்படக்கூடும் என விசேட கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்கலங்களை முறையாகக் கண்காணிப்பதற்கான தேசியத் திட்டம் மற்றும் தரப்படுத்தப்பட்ட சேமிப்பு, போக்குவரத்து நடைமுறைகள் இல்லாமையும் முக்கிய குறைபாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் மின்கலங்களின் அளவு அதிகரிக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், தேவையான சட்ட விதிமுறைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

