உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
72 பார்வைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் (BIA) இரு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.

வானூர்தி நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள பசுமை வழித்தடத்தின் (Green Channel) ஊடாகச் சென்றுகொண்டிருந்த 38 மற்றும் 41 வயதுடைய இரு வெளிநாட்டுப் பிரஜைகளும் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குறித்த இருவரும் வணிக நிறுவன ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், AK 47 என்ற வானூர்தி சேவையின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 195 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, சுங்கத் திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தையும் அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம் – வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற கஜேந்திரன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திருவுருவச் சிலை தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்ய இன்று காலை 10மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார்.…

11 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க கோரும் சத்தியாகிரகம் இன்றும் தொடர்கிறது!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி  பிக்குமார்களால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று (25) 10 ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 16…

71 0 0
இலங்கை செய்திகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

88 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை நடத்த வேண்டும் – கனேடிய அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள…

83 0 0