உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
273 பார்வைகள்

களுத்துறை மாவட்டம், ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மில்லேவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹொரணை – மீபே வீதியில், மில்லேவ பகுதியில் வைத்து மீபே நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றில் பலமாக மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பின்னால் பயணித்தவரும் உடனடியாக மீட்கப்பட்டு பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான மில்லேவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படுகொலைக்கு விசாரணை கோரி யாழ். நகரில் இன்று பேரணி

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேரணி…

34 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

47 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

46 0 0