குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பல பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று 13 ஆம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் அப் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு களைந்து பெண்கள் மீது கொட்டியதில் 20 பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 12 பெண்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர்.
எட்டு பெண்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


