உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடல் அலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
88 பார்வைகள்

அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை, மாவெல்ல கடற்பரப்பில் காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மாவெல்ல – மஹகலாகாவ கடற்கரைப் பகுதியில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எழுந்த கடல் அலையில் சிக்கி அவர் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

காணாமல்போன இளைஞனைக் கண்டறிய பிரதேச மக்கள், பொலிஸ் உயிர்பாதுகாப்புப் பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று பிற்பகல் மாவெல்ல கடற்பரப்பில் சடலம் மிதப்பதைக் கண்ட மீனவர்கள், அதனைப் படகு மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பதக்கங்களை வென்று மலையகத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு வரவேற்பு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் கடந்த 7ஆம் திகதி முதல் நடைபெற்ற Open Championship தடகளப் போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களையும்,  மூன்று வெள்ளிப் பதக்கங்களையும்…

69 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இன முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன் வலியுறுத்தல்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

66 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தண்டப்பணம்!

சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றத் தவறிய கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு…

80 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில்…

74 0 0