உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

சிறைக் கலவரத்துக்கு நீதி அமைச்சருடன் செயலாளரும் பொறுப்பேற்க வேண்டும்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
42 பார்வைகள்


ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலும், தார்மீகப் பொறுப்புக்கூறல்களுடனும் செயற்பட்டு வந்துள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது, அப்போதைய நீதி அமைச்சர் நிஸ்சங்க விஜேரத்ன வெளிநாடு சென்றிருந்த போதிலும், சம்பவத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவியை இராஜிநாமா செய்தமையை அவர் நினைவுகூர்ந்தார். அவரது பிரதி அமைச்சராக இருந்த ஷெல்டன் ரணராஜாவும் அதே காரணத்துக்காகத் தனது பதவியைத் துறந்ததையும் ரணில் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வழிகாட்டுதலின்படி, 1988 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த போல் பெரேரா, எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாகப் பதவியை இராஜிநாமா செய்த நிகழ்வையும் அவர் கோடிட்டுக் காட்டினார். இத்தகைய முன்னுதாரணங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் ஒழுக்கத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, “நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்குப் போதிய கால அவகாசம் இருந்தது. இருப்பினும் ஏன் இது குறித்து நீதி அமைச்சின் செயலாளருடன் பேசவில்லை?” என்று  கேள்வி எழுப்பினார்.

இந்தச் சம்பவத்துக்கு நீதி அமைச்சரைப் போலவே, நீதி அமைச்சின் செயலாளரும் சமமான பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இன்றைய அரசியல் சூழலில் இத்தகைய பொறுப்புக்கூறல் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0