உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்! – நளின் பண்டார வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
101 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றது என்று குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்து அதே பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர்.” – என்று குறிப்பிட்டார்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அவர் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்து, சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாற்றியமைத்தோம்.

ஆனால், தற்போதைய அரசு மீண்டும் அதனைச் சிறைச்சாலையாக மாற்றுகின்றது. ஒரு நாட்டின் கொள்கை என்பது சிறைச்சாலையைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகள் தேவையென்றால் வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறியலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு.” – என்றார்.

தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது ஒட்டுமொத்த அரச பொறிமுறையையும் வீழ்ச்சியடையச் செய்கின்றது என்று சாடிய அவர், “சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நீக்கியமை நியாயமற்றது.

அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மஹர சிறைச்சாலைச் சம்பவத்தின் போது இருந்தவாறே, இப்போதும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பதக்கங்களை வென்று மலையகத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு வரவேற்பு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் கடந்த 7ஆம் திகதி முதல் நடைபெற்ற Open Championship தடகளப் போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களையும்,  மூன்று வெள்ளிப் பதக்கங்களையும்…

87 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இன முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன் வலியுறுத்தல்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

80 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தண்டப்பணம்!

சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றத் தவறிய கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு…

95 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில்…

84 0 0