உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
12 ஞாயிறு

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
6 பார்வைகள்

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்து வீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அண்மையில் இந்த பாலம் உடைந்து வீழ்ந்த நிலையில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாலம் உடைந்து வீழ்ந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக பெய்லி பாலம் ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்காலிக வீதியினை அமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்திருந்த நிலையில் இந்த பணிகள் இன்று நிறைவுபெற்று வீதியை பொதுமக்களின் பாவனைக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் ந.கதீசன், நிறைவேற்று பணிப்பாளர் சு.கிருஸாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தற்போது தற்காலிக பாலம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவான மக்கள் குறித்த பாலத்தின் ஊடாக பயணித்ததை காணமுடிந்தது.

குறித்த பாலம் தற்காலிக பாலம் என்ற காரணத்தினால் குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பாலம் தற்காலமாக திருத்தப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு நகருக்குள் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே உயிரிழப்புக்கு காரணம்.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

31 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம்…

24 0 0
இலங்கை செய்திகள்

கருத்து, பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் ஆப்பு.!

இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

18 0 0
இலங்கை செய்திகள்

திருமலையில் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

17 0 0