உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
106 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையின்போது அரச பாதுகாப்பில் இருந்த கைதிகள் உயிரிழந்தமை மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை ஆகிய சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியவை என்றும், அவை மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் இதற்கான பின்னணி என்ன என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்காக ஆணைக்குழுவின் ஆராய்ச்சி, விசாரணை, மறு ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவுகளைச் சேர்ந்த சட்ட மற்றும் மனித உரிமைகள் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன் அங்குணகொளபெலஸ்ஸ, கண்டி போகம்பறை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு விசேட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, நிலைமையை அமைதிப்படுத்தவும் தகவல்களைத் திரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இட நெருக்கடி மற்றும் குறைபாடுகள் குறித்து முன்னரே அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கைதிகளுக்குப் போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சாதாரண குற்றவாளிகள், பாரிய குற்றவாளிகள் மற்றும் அபராதம் செலுத்த முடியாதவர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கைதிகள் மேலும் மோசமான குற்றங்களுக்குப் பழகும் அபாயத்தை உருவாக்குகின்றது. எனவே, சிறைச்சாலை கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வறுமையின் காரணமாக அபராதத்தைச் செலுத்த முடியாதவர்கள் சிறை செல்வதைத் தவிர்க்க, அபராதத் தொகையைத் தவணை முறையில் செலுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் குறித்து அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும். மேலும், கைதிகளை வகைப்படுத்தும் முறையான வேலைத்திட்டமும் அவசியமாகும்.” – என்றார்.

சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகளை மாற்றியமைக்கத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அரசு ஏற்கனவே குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

7 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டம் : லிட்ரோ அறிவிப்பு!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் மின்சார வாகன மின்கலங்களை முகாமைத்துவம் செய்ய தேசிய திட்டம் இல்லை!

இலங்கையில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகன மின்கலங்களைச் சேகரித்தல், சேமித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல் ஆகியவற்றுக்கான முறையான தேசிய முகாமைத்துவக் கட்டமைப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை…

79 0 0
இலங்கை செய்திகள்

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் (BIA) இரு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம்…

73 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம் – வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற கஜேந்திரன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திருவுருவச் சிலை தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்ய இன்று காலை 10மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார்.…

11 0 0