உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கொட்டகலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கொட்டகலை, லொக்கில் தோட்டத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருச்சுரூபத்தின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி மற்றும் வருடாந்த திருவிழா கடந்த ஜூலை 3 ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அவர்களால் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நற்செய்தி கூட்டமும் நடைபெற்றது.

இத் திருவிழாவின் இறுதி நாளான ஜூலை 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் மற்றும் அருட் சகோதரிகள், அதிதிகள் வரவேற்கும் நிகழ்வைத் தொடர்ந்து, திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

அத்துடன் திருவிழா பாடல் மற்றும் பங்குத்தந்தையினால் திருப்பலி சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தோனியாரின் திருச்சுரூபத்திற்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுன், மத பேதமின்றி அனைத்து மத மக்களும் கலந்து கொண்டதுடன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்டுக் குழுவினரால் மதிய உணவுகள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0