உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

LIRNEasia-வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட “Learn, Play, Vote” (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம், CaFFE அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சிவபாலராஜா தினேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், யாழ் மாவட்டத்தில், 2026 ஜூலை 01 ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

CaFFE அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் திருமதி சுரங்கி ஆரியவன்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக LIRNEasia நிறுவனத்தின் Senior Research Manager திரு. இசுரு சமரத்துங்க அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்வின் பிரதம வளவாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முன்னாள் செய்திப் பணிப்பாளரும் டிஜிட்டல் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான திரு. ஜூனைட் எம். ஹாரிஸ் அவர்கள் பங்கேற்றார். அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரும் அரசறிவியல் துறைத் தலைவருமான கலாநிதி திரு. விக்னேஸ்வரன் அவர்களும், முன்னாள் பொருளியல் துறைத் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு. சி. உதயகுமார் அவர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு தமது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இப்பயிற்சி அமர்வில் பங்கேற்ற இளைஞர்கள், டிஜிட்டல் தளத்தின் ஊடாக தேர்தல் செயல்முறை குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். விளையாட்டு வழிக் கற்றல் அணுகுமுறையின் மூலம் நடைமுறை அனுபவத்தைப் பெற்றதுடன், வாக்காளர் கல்வியின் முக்கிய அம்சங்கள் குறித்த தங்களது புரிதலையும் மேம்படுத்திக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0