உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அமைச்சர்களின் அச்சத்தால் தீர்வு காணப்படாமல் உள்ள மக்கள் பிரச்சினைகள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

“தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசுவதற்கு அஞ்சுகின்றனர்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

அவர்களது இந்த அச்சம் காரணமாகவே, மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அனர்த்த முகாமைத்துவம் குறித்த அரசின் விசேட கூட்டத்தில் நான் கலந்துகொண்டது எந்தவொரு அரசியல் நோக்கத்துக்காகவும் அல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பீட்டுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி போதுமானதல்ல என்பதை அங்கு நான் ஜனாதிபதியிடம் நேரடியாகவே சுட்டிக்காட்டினேன்.

நாட்டின் தலைவர்கள் யாராக இருந்தாலும், மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் குரல் கொடுக்கவே மக்கள் எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த காலத்தில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று மார்தட்டிய ‘வியத்மக’ அறிஞர்களுக்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் இன்று தங்களை ‘நடமாடும் நூலகங்கள்’ என்று கூறிக்கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் நடக்கப் போகின்றது. நியூட்டனின் விதிப்படி மேலே சென்றால் கீழே விழுந்துதான் ஆக வேண்டும்.

தற்போதைய அரசு எரிபொருள் விலையை 20 ரூபாவால் குறைத்துள்ளதாகக் கூறுகின்றது. ஆனால், இதனால் பஸ் அல்லது ஓட்டோ கட்டணங்கள் எதுவும் குறையவில்லை. எனவே, ஊடகங்கள் தேவையற்ற வதந்திகளைத் தவிர்த்து, மக்களின் உண்மையான எரியும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

நாட்டை முழுமையாக நாசமாக்கி, அதன் மீது அரசியல் செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டின் நன்மைக்காக எப்போதுமே எமது ஆதரவு இருக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0