உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கோர விபத்தில் பாட்டியும், பேரனும் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் நேற்று (01) நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், அவரது 12 வயது பேரனும் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருவளையில் நடைபெற்ற பொசன் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த 62 வயதுடைய பெண்ணும், அவரது 12 வயது பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் தாத்தாவே முச்சக்கரவண்டியை செலுத்தியிருந்தார். அவர் பலத்த காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, களுத்துறை கட்டுகுருந்த பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போது, எதிரே வந்த முச்சக்கரவண்டி திடீரென பேருந்தின் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி பேருந்தின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியிருந்தது.

முச்சக்கரவண்டியை செலுத்தியவருக்கு நித்திரை ஏற்பட்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே, விபத்து நடந்த தருணத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர், சாரதியின் அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பையை திருடிச் சென்ற சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்து மற்றும் திருட்டுச் சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

40 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

50 0 0