உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஜூலை 6ஆம் திகதி முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்


தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து எதிர்வரும் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

இது குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,

“தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி, தற்போது 30 ரூபாவாகக் காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தை 34 ரூபாவாக அதிகரிப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 100 கிலோமீற்றர் வரையான குறுகிய தூரப் பயணங்களுக்கான கட்டணங்களை 12 வீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட நீண்டதூரப் பயணங்களுக்கான கட்டணங்களை 20 வீதத்தாலும் அதிகரிப்பதற்கும் இதன்போது இருதரப்பிலும் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.” – என்றார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0