உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

காணி மீட்பு போராட்டம் தீவிரம்! – பலாலி மீள்குடியேற்ற அமைப்பு உதயம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

“வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் எனக் கூறி, கடந்த 36 வருடங்களாக பலாலி, மயிலிட்டி, கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் போன்ற பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது.

இக்காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித சாதகமான பலனும் கிடைக்கவில்லை.

எனவே, இந்த நில உரிமைப் போராட்டங்களை இன்னும் திட்டமிட்ட வடிவில் நலிவடையாது தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதற்கும், எமது சொந்த நிலங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கும் ஏதுவாகவே ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் எமது நில மீட்புக்கான அனைத்துச் செயற்றிட்டங்களும், போராட்டங்களும் இந்த அமைப்பின் ஊடாகவே முறைப்படி முன்னெடுக்கப்படும்.” – என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0