புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி!
புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நான்கு மாணவர்களும் தோணியில் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற 4 வேளை, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.