உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
145 பார்வைகள்

பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தகவல் தருகையில்,

கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.

இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும் நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொலிசாருக்கு உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை.

இந்நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம் ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் விடயத்தை வினவியபோது காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க வந்ததாக தெரிவித்தனர்.

நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத் தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்சென்றார்கள்.

குறித்த விடையம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என பதிலளித்தார்

குறித்த காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

குறித்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12 காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட உள்ளது.

ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.

ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் நிலத்துக்கு கீழ் சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்பட உள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார் 3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள் ,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில் மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.

ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் நகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி.!

மன்னார் நகரசபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 4 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. மன்னார் நகர சபையின் 18 ஆவது மாதாந்த கூட்டம் இன்றைய தினம்…

97 0 0
இலங்கை செய்திகள்

கடலில் நீராடச் சென்ற இந்தியப் பிரஜை நீரில் மூழ்கி உ**யிரிழப்பு.!

கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார்…

95 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து.!

வெலிகம, மிதிகம பிரதேசத்திலுள்ள புகையிரதக் கடவையொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து மாத்தறை…

102 0 0
இலங்கை செய்திகள்

வேலணை பிரதேச சபையின் 2027 பாதீடு நிறைவேற்றம்.!

22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை…

107 0 0