உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெனிகே தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுர மங்கள விக்ரமாராச்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் கலந்து கொண்டதுடன், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிலவும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்து கருத்துக்களை முன்வைத்தார்.

மேலும், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

64 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0