உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
44 பார்வைகள்

வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நேற்று 29.06.2026 ஆம் திகதி புதிதாக அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

சிறுவர்களின் எதிர்காலத்தை கல்வியால் உயர்த்துவோம் எனும் தொனிப்பொருளில் மீனாட்சி தோட்ட இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைத்து நிகழ்வு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நேற்று 29 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கடவளையை சேர்ந்த சைவ சித்தாந்த சிவ பித்தன் தியா சுவாமிகள் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து இந்த நிகழ்வில் 67 க்கும் மேற்பட்ட அறநெறி பாடசாலை மாணவ மாணவிகள் உள்வாங்கப்பட்டிருந்தனர்,

அத்தோடு ஹட்டன் கமூக வத்த இளைஞர் கழக தலைவர் நவநீதன் என்பவரின் அன்பளிப்பாக அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை மாணவ மாணவிகளின் கலை, கலாச்சார நிகழ்வும் மேலும் மெருகூட்டியிருந்ததும் விசேட அம்சமாகும்.

நிகழ்வில் தோட்ட பொதுமக்கள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வை சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

78 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0