உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

82 பார்வைகள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், கிழக்கு மாகாண மக்களின் தற்போதைய தேவைகள், நாட்டின் அரசியல் நிலவரங்கள் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியம் தொடர்பாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், அரச மற்றும் தனியார் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகள், இராணுவமயமாக்கல் மற்றும் வாழ்வாதாரச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் நிலைமை, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், “அமைதியான மற்றும் வளமான இலங்கையை உருவாக்குவதற்கு அவுஸ்ரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்” என்றும் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

29 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0