உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வரும் அரசு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
59 பார்வைகள்

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசு அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விசனத்தை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் சாடியதாவது,
“கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொந்தமாக வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளுடன் கூடிய உன்னதமான எதிர்காலம் ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் அவர்களுக்கு வெறும் 20 கிலோ அரிசியைக் கடனாக வழங்கும் அவல நிலையே நாட்டில் காணப்படுகிறது.

இந்த நாட்டின் அரச ஊழியர்களே பெருந்திரளாகத் திரண்டு சென்று தபால் மூலம் வாக்களித்து இந்த ஆட்சியை உருவாக்கப் பாரிய பங்களிப்பை வழங்கினார்கள். ஆனால், இன்று அதே அரச ஊழியர்களை ‘திருடர்கள்’ என்று அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார். அரச ஊழியர்களை இவ்வளவு தூரம் அவமதிக்கும் மற்றும் பழிவாங்கும் ஒரு நிர்வாகம் இதற்கு முன்னர் இலங்கையில் இருந்ததில்லை. இது வரலாற்றிலேயே மிக மோசமானதொரு ஆட்சியாகும்.

தற்போதைய அரசிடம் நாட்டின் வளர்ச்சிக்கான எந்தவொரு முறையான பொருளாதாரத் திட்டமும் இல்லை. தினம் இருவரை என்ற கணக்கில் கைது செய்வது மட்டுமே இந்த அரசின் பிரதான வேலைத்திட்டமாக மாறியுள்ளது.

ஏதாவது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி, தினமும் இருவர் வீதம் அரசியல் பழிவாங்கல்களின் அடிப்படையில் கைது செய்து, அதன் மூலமே இந்த அரசு தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கின்றது என விமல் வீரவன்ச கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

78 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0