உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒழுக்கமானதும் நாகரிகமானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டை தற்போதைய அரசு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணியின் 76 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த காலத்தில் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. பல தசாப்தகால யுத்தத்துக்குப் பின்னர் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புதற்கான சிறந்த வாய்ப்பு எமக்குக் கிடைத்த போதிலும், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் திட்டமிடப்பட்ட முறையில் இனவாதமும் மதவாதமும் விதைக்கப்பட்டு, நாடு மீண்டும் பிரிவினைக்குள் தள்ளப்பட்டது.

எனினும், 2024 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் அவ்வாறான எந்தவொரு இன, மதவாத மோதல்களுக்கும் நாட்டில் இடமில்லை. நாட்டின் பொருளாதாரம், ஒழுக்கம், சட்டம் மற்றும் நாகரிகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சகலரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழவேண்டும்.

சிங்களவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் மனிதர்கள். எமக்கு மத்தியில் எந்தவொரு பாகுபாடும் இல்லை. நாம் அனைவரும் சாதி, மதம், மொழி அல்லது வேறு எந்தவொரு வேறுபாடுமின்றி ஒரே தாயின் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் வாழவேண்டும்.” – என்று அமைச்சர் விஜித ஹேரத் அறைகூவல் விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

80 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0