உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது என்றும், அவ்வாறு வெளியிடப்படும் எதிர்வுகூறல்களில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கேகாலை மாவட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்க நடத்திய காலை நேர நிகழ்ச்சியில் எதனைத் தெரிவிக்கின்றாரோ, அதுவே அன்றைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்லது அரச வட்டாரத்தின் முடிவு என்பதை மக்கள் எளிதாகப் புரிந்துகொண்டார்கள். இன்று நாட்டின் ஊடகக் கட்டமைப்பு அதே பாணியிலேயே அரசால் கையாளப்பட்டு வருகின்றது.

தற்போது ஹட்சன் சமரசிங்க போன்றவர்கள் இல்லை. அதற்குப் பதிலாக 2 அல்லது 3 யூடியூப் சேனல்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளன. அந்த யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது. அரச மாளிகையில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே இந்த யூடியூப் சேனல்கள் ஊடாகத் தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

அவ்வாறு வெளியிடப்படும் எதிர்வுகூறல்களில் என்னுடைய பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அடக்குமுறை மற்றும் பழிவாங்கும் நடைமுறைகளை நேரில் அனுபவித்தவன் என்ற ரீதியிலும், அது குறித்த அரசியல் அறிவைக் கொண்டவன் என்ற அடிப்படையிலும் நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அரசு இவ்வாறான பழிவாங்கும் கட்டமைப்பு மற்றும் ஊடக அடக்குமுறை இயந்திரத்தை எவ்வளவுதான் பயன்படுத்த முற்பட்டாலும், அதனை நீண்ட காலத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. ஏனெனில், தற்போதைய ஆட்சியாளர்கள் குறிப்பிடும் 75 வருட சாபக்கேட்டு அரசியலில், எப்போதும் கடுமையான விமர்சனங்களுக்கும் மக்களின் எதிர்ப்புகளுக்கும் உள்ளான ஓர் அதிகார இயந்திரமே இதுவாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

77 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0