உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எங்களை அசைக்கவே முடியாது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசின் தற்போதைய அரசியல் பலம் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடந்து முடிந்த தேர்தல்களில் இந்நாட்டு மக்கள் தங்களின் தூய்மையான அரசியல் ஆணை மூலம் இந்த அரசுக்குப் பாரிய பலத்தை வழங்கியுள்ளனர். நாட்டைப் புதிய பாதையில் கொண்டு செல்வதற்காகவே மக்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்தனர்.

மக்களின் பலத்த ஆதரவோடு இயங்கும் இந்த அதிகாரக் கட்டமைப்பை, நாடாளுமன்றத்துக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளால் எந்த வகையிலும் பலவீனப்படுத்தவோ அல்லது அசைக்கவோ முடியாது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி முன்னோக்கி நகரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

77 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0