உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
48 பார்வைகள்

இன்று தேசிய மக்கள் சக்தி அரசில் இருப்பவர்கள் அனைவரும் குரங்குகளைப் போலவே நடந்து கொள்கின்றார்கள் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்து மதம் பிடித்தவர்களைப் போல் செயற்படுகின்றார்கள் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“இன்று நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் நாட்டின் உண்மையான விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை முற்றிலும் விடுத்து, குரங்குகளை எண்ணும் திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அன்று நாமல் கருணாரத்ன போன்றவர்கள், குரங்குகளை எண்ணும் விநோதமான பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

அவ்வாறு நாமல் கருணாரத்ன குரங்குகளை எண்ணிய பணத்துக்கு என்ன நடந்தது? அந்தப் பணம் தற்போது எங்கே உள்ளது? எண்ணப்பட்ட குரங்குகள் எங்கே? அவை அனுப்பப்படுவதாகக் கூறப்பட்ட தீவு உலக வரைபடத்தில் எங்குள்ளது என்று இன்று அரசில் இருக்கும் எவருக்குமே தெரியாது. இவர்களின் கூத்துக்களை நாடே பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தம்புத்தேகம மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் வாழும் நெல் விவசாயிகளின் தற்போதைய அவல நிலை குறித்துப் பாருங்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது சொந்தக் கிராமமான தம்புத்தேகமவுக்கோ அல்லது பொலன்னறுவைக்கோ எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. அங்குள்ள விவசாயிகள் இன்று நிர்க்கதியாக்கப்பட்டுத் தங்களின் உரிமைகளுக்காகப் போராட்ட பேரணிகளை நடத்தி வருகின்றார்கள்.

அன்று நாமல் கருணாரத்ன போன்றவர்கள் கோவண ஆடையை அணிந்துகொண்டு, சாதாரண ஏழை விவசாயிகளுடன் வீதியில் இறங்கி, சோறு உண்டு, வீதிகளிலேயே படுத்துறங்கி, வாகனங்கள் கூடச் செல்ல முடியாதவாறு தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் இன்று ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் ஏற்பட்ட அதிகார போதையால் அவர்களுக்கே மதம் பிடித்துள்ளது.

முன்னர் விவசாயிகளுக்காகப் போராடியவர்கள் இன்று ஆட்சியில் அமர்ந்துகொண்டு விவசாயிகளுக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்த அரசின் அமைச்சர்கள் இன்று உழைக்கும் விவசாயிகளைக் ‘கசிப்பு குடிப்பவர்கள்’ எனக் கேவலமாகக் கூறுகிறார்கள். கிராமத்தில் கசிப்பு குடித்துக்கொண்டிருந்த ஒருவருக்குத்தான் தாங்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சராக்கினோம் என்று விவசாயிகள் இன்று கவலை வெளியிடுகின்றார்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0