உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ். மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தும் பணியினை யாழ். மாநகரசபை ஆரம்பித்துள்ளது.

நீண்டகாலத்தின் பின்பு புதிய மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்.மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகள் ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் தலா 25 மின்விளக்குகள் என்ற ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டு வட்டார ரீதியாக பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாழ். மாநகர சபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு வட்டாரத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரான ப.தர்சானந்தினால் மேற்படி மின்விளக்குகள் வட்டாரத்தின் பகுதிகளில் பரவலாகப் பொருத்தப்பட்டுள்ளன.

ஆத்திசூடி வீதி, உள் ஒழுங்கைகள், பிறவுண் வீதி, சபாபதி வீதி, நாச்சிமார் கோவிலடி மற்றும் உள் வீதிகள் என்பனவற்றில் முதற்கட்டமாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஏனைய ஒழுங்கைகளுக்கும் தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0