• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

Mathavi by Mathavi
June 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!
Share on FacebookShare on Twitter

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில், ஆடைத் துறை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான வசதிகளை அரச அனுசரணையுடன் வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசு அதிகபட்ச ஆதரவை வழங்கும் என உறுதியளித்ததுடன், அதற்கான எதிர்கால கொள்கைத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

கைத்தொழிற்சாலைகளைக் கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக ஒன்றிணையுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காகத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழிற்சாலைக் கட்டடங்களை அரசின் முழுமையான அனுசரணையுடன் வழங்குவதற்கான “Plug and Play” முறைமை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விவரித்த ஜனாதிபதி, ரூபாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரித்த போதிலும், இதனால் டொலருக்கு ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு டொலர் ஈட்டும் வழிகளை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது என்று சுட்டிக்காட்டினார். ரூபா செலவினங்களைக் கட்டுப்படுத்தி, டொலர் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. காணிகளின் பெறுமதி மற்றும் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசு நேரடியாகத் தலையிடும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான சட்ட மறுசீரமைப்புகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், வற் வரி முறைமை காரணமாக உள்நாட்டு மூலப்பொருள் வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டதுடன், அதன்போது வழங்கக்கூடிய மாற்றுச் சலுகைகள் குறித்த முறையான முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு வர்த்தகர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துதல் மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி அந்த நாடுகளிலிருந்து கிடைக்கும் கோட்டா அளவுகளை அதிகரிப்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் திறம்படச் சர்வதேசத் தரத்துக்கு மேற்கொள்வதற்காக, “வர்த்தகத்துக்கான தேசிய ஒற்றைச் சாளரம்” இந்த ஜூலை மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலீட்டிற்கான தேசிய ஒற்றைச் சாளரத்தை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்படும் பணம் எமது நாட்டிலிருந்து வெளியில் செல்வதைத் தடுப்பதற்காக, சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பளித்தமைக்காக முதலீட்டாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

அத்துடன், தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு மாதாந்தம் ஒரு சந்திப்பை வழங்குமாறு விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இந்த விசேட சந்திப்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலி பிரேமதிலக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்ஹ மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Posts

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்...

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

by Mathavi
June 22, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக...

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

by Mathavi
June 22, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலும்...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை...

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு மிகக்...

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

by Mathavi
June 22, 2026
0

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

by Mathavi
June 22, 2026
0

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி