கணவரால் பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் பிபிலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என பொலிஸார் தெரவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோழி இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவந்துள்ளது.
அவருடைய காலில் எரிகாயங்கள் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபிலை வைத்தியசாலையில் சந்தேகநபர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது.!
2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினராலும், மாணவர் அமைப்புகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ள கல்வி அமைச்சு, பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில்...
கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் திருவிழா.!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தென்மராட்சி, கச்சாய் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று (20.06.2026) சனிக்கிழமை இரவு மிக...
புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!
முல்லைத்தீவு - குணா கலைக் கல்லூரியின் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது...
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!
நாடு முழுவதும் தற்போது மிகத் துரிதமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக 2026.06.15 முதல் 20.06.2026 வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு...
நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.!
ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆரச்சிகட்டுவ, வைரன்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 13...
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹூங்கம, ரன்ன வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் 53 வயதுடைய நபர்...
கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு...
இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!
கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று (20) சடலமாக...
நயினாதீவு கடலில் உயிரிழந்த அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை.!
நயினாதீவு கடலில் உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்றுள்ளார். இவரது தந்தை...
பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?
"பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில்...










