• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சிறுநீரக மாற்று சிகச்சைக்காக முன்னாள் போராளி ஒருவர் நிதிஉதவி கோரல்

selvan by selvan
June 20, 2026
in இலங்கை செய்திகள்.
0
சிறுநீரக மாற்று சிகச்சைக்காக முன்னாள் போராளி ஒருவர் நிதிஉதவி கோரல்
Share on FacebookShare on Twitter

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிதியுதவியைக் கோரியிருந்த முன்னாள் போராளி, தமக்கு தாராளமாக உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

எதிர்மன்னசிங்கம் கிரேசியன் என்பவரே இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தடுப்பு முகாம்களிலும், சித்திரவதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகி உயிருக்குப் போராடி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் விடுத்த அவசர வேண்டுகோளின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஒன்றிணைந்து இதுவரை 31 இலட்சத்திற்கும் அதிகமான பண உதவிகளைச் செய்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் தனக்குக் கைகொடுத்த தமிழ் மக்களுக்குத் தனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட கிரேசியன், தனது அறுவை சிகிச்சை முழுமையாக நிறைவேறுவதற்கும், தனது பிள்ளைகளுடன் மீண்டும் சந்தோஷமாக வாழ்வதற்கும் இன்னும் 50 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ஆதங்கத்தைக் கண்ணீருடன் பகிர்ந்து கொள்கையில்:
“எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவசரமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சிகிச்சையை உடனடியாகச் செய்யாவிட்டால் எனது உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவியும், பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.

இந்த அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை. எனவே, எனது தமிழ் மக்கள் என்னை எந்நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எஞ்சிய தொகைக்கும் எனக்கு உதவுங்கள்” எனப் பணிவன்போடு கோரிக்கை விடுத்துள்ளார்.

போராளியின் சிகிச்சைக்குப் பங்களிக்க விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நற்பண்பாளர்கள், கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசி எண் வழியாகவோ நேரடியாகத்அல்லது தொலைபேசி எண் வழியாகவோ நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும்.

நம் தேசத்திற்காகத் தன் வாழ்வைத் தொலைத்த ஒரு போராளியின் உயிரைக் காக்கவும், ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும் தம்மாலான உதவிகளை வழங்குமாறு உலகத் தமிழ் உறவுகளிடம் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வங்கி விபரங்கள்:
பெயர்: எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் (Ethirmannasingam Grashan)
வங்கி: லங்கா வங்கி (BOC)
கிளை: கல்வியங்காடு
கணக்கு இலக்கம்: 94948569
தொடர்பு இலக்கம்:
தொலைபேசி: 0775621613

Related Posts

இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி பிரித்தானியாவில் போராட்டம்!

இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி பிரித்தானியாவில் போராட்டம்!

by selvan
June 20, 2026
0

பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி  இன்று அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது."தமிழீழ சுயநிர்ணய...

மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரை!

மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரை!

by selvan
June 20, 2026
0

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று(20) சனிக்கிழமை மதியம் கடையொன்றின் மீது ஏற்பட்ட தீப் பரவினால் ஒரு கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. குறித்த கடை உரிமையாளர்...

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!

by selvan
June 20, 2026
0

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலை பகுதியிலுள்ள உள்ள வயலில் யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வயல் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இந்த யானை...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன்யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் கலந்துரையாடல்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன்
யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் கலந்துரையாடல்!

by selvan
June 20, 2026
0

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று...

இலங்கையில் சீன ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்!

இலங்கையில் சீன ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்!

by selvan
June 20, 2026
0

இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல்...

செம்மணிப் புதைகுழி விசாரணைக்குசர்வதேச நிபுணத்துவம் மிக அவசியம்

செம்மணிப் புதைகுழி விசாரணைக்கு
சர்வதேச நிபுணத்துவம் மிக அவசியம்

by selvan
June 20, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று இலங்கைத்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில்  566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில்  566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி

by selvan
June 20, 2026
0

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1...

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின்  33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில்  சம்பவம்

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின்  33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில்  சம்பவம்

by selvan
June 20, 2026
0

வீதி பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக   சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது...

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை

by selvan
June 20, 2026
0

மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் படகு ஓடுபாதையினை ஆழப்படுத்தித் தருமாறு மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வேட்டையாமுறிப்பு, கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

by selvan
June 20, 2026
0

வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணியும் சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி