உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அரசு வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அரசாங்கம் தேர்தல் காலத்தில் வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என வீட்டு வேலை பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் ப்ரோட்டெக்ட் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி,
வீட்டு வேலை பணியாளர்களின் நலன் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் அண்மையில் புதிய சட்டங்கள் மற்றும் தொழிலாளர் தொடர்பான கொள்கைகளை அமுல்படுத்தியபோதும், வீட்டு வேலை பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் போதுமான அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீட்டு வேலை பணியாளர்களுக்கான உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

64 0 0