சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!
தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மகாகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஆவார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளைத் தொடங்கினர்.
அண்ணன் மற்றும் தம்பிக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் தகராறாக மாறியதிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய சந்தேகநபரான தம்பி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.