உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
128 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் நகரசபை பிரதேச சபை தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, பொதுமக்களுக்கும் மத ஸ்தலங்களுக்கும் சொந்தமான காணிகள் மற்றும் நிலங்கள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, பொதுமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் சொந்தமானதாக காணப்படும் LRC காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் சோழ மண்டல குளம் பகுதியில் காணிகள் பயனாளிகளுக்கு வழங்குவது, சாளம்பன் – நெடுங்குளம் பகுதியில் பயனாளிகளுக்கான காணி வழங்கல், தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அளவீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0