உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது.

இவ் வருடத்திற்கான விழா காலி முகத்திடல் ITC ரத்னதீப (ITC Ratnadipa) விருந்தினர் விடுதியில் நேற்று (16.05.2026) இடம்பெற்றது.

இதில் வட மாகாணத்திற்கான பாடசாலை ரீதியில் சிறந்த புத்தாக்கமாகவும் இவ்வருடத்திற்கான சிறந்த புத்தாக்குனராகவும் யா/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையை சேர்ந்த செல்வி ரூபிகா அருந்தவம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருதும் சான்றிதழும் குறித்த நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

இதே மாணவி கடந்த ஜூன் 05 ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான புதிய கண்டுபிடிப்பு போட்டியிலும் பங்குபற்றி சிறப்பு சான்றிதழ் பெற்ற ஒரு வளர்ந்து வரும் புத்தாக்குனரும் ஆவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0