உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கொழும்பில் இன்று (18) போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகைக்கு இடையூறு விளைவித்ததற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று (18) போர் வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்கு சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டிருந்தது.

தேசிய போர் வீரர்கள் நினைவு நாள் விழா நாளை (19) ஜனாதிபதியின் தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் போர் வீரர்கள் நினைவிடத்தின் முன்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒத்திகையும் ஏனைய ஏற்பாட்டு பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​ ​​முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர், அனுமதியின்றி போர் வீரர்கள் நினைவிடத்திற்குள் நுழைய முயன்று, ஒத்திகைப் பணிகளுக்கும் அதிகாரிகளின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பொலிஸ் அதிகாரிகளால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

அத்துடன், அங்கிருந்த குழுவினர் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது அங்கு நின்ற இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் செல்ல முயன்ற நிலையில், விமல் வீரவங்சவின் அதிரடி தலையீட்டை அடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸாரால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இந்த சட்டவிரோத மற்றும் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட அவரது குழுவினருக்கு எதிராக அடுத்த கட்டமாக உரிய நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

63 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0