உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு – சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் சென்னையில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், அக் கட்சியின் தோழர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பல நூறு பேர் நினைவேந்தல் நிகழ்வில் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் நினவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியரசு, பாலாஜி, அர்ச்சுனா இராமநாதன், சண் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள். இறுதியாக வி.சி.க கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நிகழ்வில் தனக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமான உறவு குறித்தும், குறிப்பாக ஈழத் தமிழர்கள் தமிழகம் உள்ளிட்ட இந்திய தேசத்தில் எத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றி தமக்கான அரசியல் ஆதரவை வலிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயடங்களைச் சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள…

65 0 0
இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

85 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

53 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

100 0 0